bsnleu

bsnleu

welcome

welcome

Wednesday 31 May 2017

மிருக வதை தடை சட்டத்தில் திருத்தம் செய்த அரசாணைக்கு இடைக்கால தடை: சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவு...

மத்திய அரசின் மாட்டிறைச்சி விற்பனை தடை சட்டத்துக்கு உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை இடைக்கல தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கோப்புப் படம். பொதுநல மனுக்களை விசாரித்த நீதிபதிகள் முரளிதன், கார்த்திகேயன் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது. மேலும், இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மாடுகளை இறைச்சிக்காக விற்க தடை விதிக்கும் வகையில், விலங்கு வதை தடுப்புச் சட்ட விதிகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கையை பல்வேறு தரப்பினர் எதிர்த்து வருகின்றனர். இந்த சட்டத் திருத்தத்தால், மாட்டு இறைச்சி தொழிலில் ஈடுபட்டு வருவோரின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த செல்வகோமதி, ஆசிக் இலாஹி பாபு ஆகியோர் பொர்துநல மனுக்களை இன்று தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்தது. இதனையடுத்து இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது நீதிபதிகள், "இந்தப் பிரச்சினை மத்திய - மாநில அரசுப் பட்டியலில் இருக்கிறது. அப்படியிருக்கும்போது மத்திய அரசு இதில் தன்னிச்சையாக ஆதிக்கம் செலுத்த முடியாது. எனவே மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது" எனத் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மே-31, சர்வதேச புகையிலை தினம்...


Sunday 28 May 2017

காந்தி கிராம கிராமிய பல்கலை.க்கு ரூ.25 லட்சம் டி.கே.ரங்கராஜன் எம்.பி. ஒதுக்கீடு...

காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமகிராமிய பல்கலைக்கழகத்தின் வேண்டுகோளுக்கிணங்க வகுப்பறையும், ஆய்வகமும் கட்டுவதற்கு டி.கே.ரங்கராஜன் தனது தொகுதி நிதியிலிருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கியுள்ளார். இதுதொடர்பாக 19.5.2017 தேதியிட்ட கடிதம் டி.கே.ரங்கராஜன் அலுவலகத்திலிருந்து சென்னை மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது

JE தேர்வில் வெற்றி பெற்று பயிற்சி முடித்து பணியில் . . .

அருமைத் தோழர்களே ! JE தேர்வில் வெற்றி பெற்று பயிற்சி முடித்து பணியில் சேர இருப்பவர்கள்  29-05-17 அன்று முதல் பீல்டு ட்ரைனிக் பெறுவதற்காக நமது BSNL தமிழ் மாநில நிர்வாகம் உத்தரவு வெளியிட்டுள்ளது, CGM (O) Lr.NO. RET/252-56/2016/23 dt 26-05-17   இப்பயிற்சி 4 வாரத்திற்கு நடைபெறும். அனைத்துதோழர்,  தோழியர்களுக்கும்  நமது வாழ்த்துக்கள்நமது மதுரை மாவட்டத்தில் 6 பேர் பயிற்சி பெற உள்ளனர்.
  1. S.R. RAMKUMAR
  2. RAKOTIKIRANKUMAR
  3. POLISIVAREDDY
  4. K. THAMARAIRUBINI
  5. PRINCEKUMAR
  6. S. DIVAKARAN

ஊதிய பெறுவதற்கு கடுமையான போராட்டத்திற்கு தயாராவோம்

அருமைத் தோழர்களே ! நமது BSNL-லில்  3வது  ஊதியகுழுவிற்கு DPE அளித்துள்ள பரிந்துரையில் AFFORDABILITY CLAUSE- நீக்கவேண்டும்காரணம் அதில் பொதுதுறை நிறுவனங்கள் தங்களூடைய Profit Before Taxation (PBT)வரிககு முந்தைய லாபத்தில் ஊதியதிருத்த திற்காக 20 சதவீதம் செலவு செய்து கொள்ளலாம் என்று சொல்ல ப்பட்டுள்ள்து அதன்படி BSNL ல் கடந்த மூன்று வருடங்களில் லாபம் இல்லை.  DOTயின் முன்னாள் செயலர்  திரு J.S.DEEPAK  நமக்கு ஆதரவாக இருந்தார் த்ற்போது அவர் பணி ஓய்வு சென்றபின் நிலை மாறியுள்ளதுஆகவே  அனைத்து சங்கங்களூம் ஒன்றினைந்து ஒருகடுமையான போராட்டம் நடத்தினால்தான் நாம் பெறமுடியும் அதற்கு தயாராவோம். 
நமது பொதுசெயலர் தோழர்.அபிமன்யூ அவர்கள் CMD யை சந்தித்து DOT யின் தற்போதைய நிலை சம்மந்தமாக விவாதித்தார்பாரதபிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களுக்கு 26.05.2017 அன்று கடிதம் எழுதியுள்ளார். எனவே அனைவரும் இணைந்து கடுமையான போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது காலத்தின் கட்டாயம்.

BTL கிளை தலைவர் k. மகாராஜன் பனி நிறைவு பாராட்டு விழா...

அருமைத் தோழர்களே ! நமது BTL கிளையின் தலைவர் தோழர். k. மகாராஜன் அவர்களுக்கு பனி நிறைவு பாராட்டு விழா...கிளையின் சார்பாக அம்மையநாயக்கனூரில் மிக மிக சீரும் சிறப்புமாக தோழர் காசிராஜன் தலைமையில் நடந்தேறியது...
மாவட்டத்தலைவர் தோழர்.எ. பிச்சைக்கண்ணு , மாவட்ட செயலர் தோழர்.சி.செல்வின் சத்தியராஜ் இருவரும்  சிறப்புரை நிகழ்த்தினார்கள்.  விழாவிற்கு கிளையின் பெருவாரியான தோழர்களும்,   தோழர்.கே. மகாராஜனின்   ஏராளமான உறவினர்களும் கலந்து கொண்டது சிறப்பம்சமாகும்.
தோழர். k. மகாராஜன் உறவினர்கள் உட்பட, தோழர்கள்,  சின்னையன், ஜான் போர்ஜியா, தனபால், ரசாக் ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினார்கள். மகாராஜன் ஏற்புரைக்குப்பின் தோழர். பெரிய சாமி நன்றியுரை நிகழ்த்த விழா இனிதே நிறைவுற்றது.

Saturday 27 May 2017

மே-26, தீர்விற்கு திட்டம் தீட்டிய மாவட்ட செயற்குழு...

அருமைத் தோழர்களே ! நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம், மாவட்டத்தலைவர் தோழர்.எ.பிச்சைக்கண்னு தலைமையில் மிகவும் சீரிய முறையில் 26-05-17 வெள்ளி அன்று மதுரையில் நடைபெற்றது.  மாவட்டச் செயலர் தோழர்.சி. செல்வின் சத்தியராஜ் அஜெண்டா மீதான அறிமுக உரை நிகழ்த்தினார். ஈரோடு மாநில மாநாட்டில் மாநில சங்க நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்கள், கே.பழனிக்குமார், பி.சந்திரசேகர், பி. ரிச்சர்ட் ஆகியோருக்கு மாவட்ட சங்கத்தால் பாராட்டப்பட்டது.
ஆய்படுபொருளின் மீது , தேனி , திண்டுக்கல், மதுரை ஆகிய மூன்று ரெவன்யூ மாவட்டங்கள் சார்பாக நிர்வாகிகள் விவாதத்தில் பங்கு பெற்றனர். செயற்குழுவில் எழுந்த கருத்துக்களின் அடிப்படையில், மாவட்டச் செயலர் தோழர் செல்வின் சத்திய ராஜ் தனது தொகுப்புரையில்...  குறிப்பாக ஒரு சில துணைக்கோட்ட அதிகாரிகளின் நடவடடிக்கை வருத்தமளிப்பதாக உள்ளது என்றும், இது குறித்து சம்பந்தப்பட்ட வர்களிடமும், மாவட்ட நிர்வாகத்திடம் விவாதித்தும் போதிய முன்னேற்றம் எட்டவில்லை என்பதையும் குறிப்பாக பொது மேலாளர் திருமதி.S.E.ராஜம்  ITS அவர்களின் நிலைப்பாடு ஏற்புடையதாக இல்லை என்பதையும் நமது  மாநில சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம்.  குறிப்பிட்ட காலவரைக்குள் பிரச்சனைகள் தீர்வில் முன்னேற்றம் இல்லாத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்வது என செயற்குழு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.
அதன்பின் இம் மே மாதம் பணிநிறைவு செய்யும்  நமது மாவட்ட சங்க நிர்வாகி அருமைத் தோழர் .எஸ். மனுவேல் பால்ராஜ் அவர்களுக்கு மாவட்ட சங்கத்தின் சார்பாக பணிநிறைவு பாராட்டு விழா மிக விமர்சியாக நடத்தப்பட்டது. மாநில சங்க நிர்வாகிகளும், மாவட்ட சங்க நிர்வாகிகளும் தோழர்.எஸ். மனுவேல் பால்ராஜ் அவர்களை பாரட்டிப் பேசினர். மாவட்ட சங்கத்தின் சார்பாக கவரவிக்கப்பட்டு நினைவு பரிசும் வழங்கப்பட்டது. தோழர்.எஸ். மானுவேல் பால்ராஜ் ஏற்புரைக்குப்பின் தோழர்.என். செல்வம் நன்றியுரை கூற நிகழ்சசி இனிதே நிறைவுற்றது.

கார்ட்டூன் . . . கார்னர்

அரசியல் என்பது சம்பாதிப்பதற்கான தொழில் அல்ல: கமல்…

Ø    பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கமல், தொலைக்காட்சியில் அடியெடுத்து வைக்கிறார். சர்வதேச நாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சிதான் பிக் பாஸ். தற்போது விஜய் தொலைக்காட்சி நிறுவனம் தயாரித்து வருகிறது.இந்நிகழ்ச்சி ஜுன் 25ஆம் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. தமிழில்பிக் பாஸ்அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கமல் பதிலளித்தார்.
Ø    அப்போது அவர் கூறியதாவது:
Ø    கேள்வி: நீங்கள் எப்போது அரசியலுக்கு வருவீர்கள்?
Ø    பதில்: நான் அரசியலுக்கு வந்து வெகுநாட்களாகி விட்டது. 21 வயதில் என் கையில் எப்போது மை வைத்தேனோ அப்போதிலிருந்தே அரசியலில் இருக்கிறேன், ஆனால் போட்டி போடும் அரசியலில் இல்லை. யார் வருவார்கள், யார் வரக்கூடாது என்று முடிவு பண்ற வெகுஜன கூட்டத்தில் நானும் நின்று கொண்டிருக்கிறேன்.
Ø    ரஜினி அரசியலுக்கு வரலாம் என நினைக்கிறீர்களா..?
Ø    ரஜினி வரலாமா என்பதை 5 வருடங்கள் வரும் போது சொல்கிறேன்.
Ø    தமிழர்கள்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்ற கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
Ø    தமிழ் உணர்வோடு இருக்கும் யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம். காந்தி தமிழனா, நேரு தமிழனா, சுபாஷ் சந்திர போஸ் தமிழனா?. ஆனால் போஸ் என்ற பெயரில் என் ஊரில் நிறையப் பேர் இருக்கிறார்கள். காந்தி என்ற பெயரில் இந்தியா முழுக்க பலர் இருக்கிறார்கள். அக்கருத்தை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். என்னைப் பொறுத்தவரை கேரள மக்கள் என்னை மலையாளியாகத் தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக அந்த ஊருக்கு முதல்வராக ஆவீர்களா என்று கேட்டால் எனக்கு ஆர்வமில்லை.
Ø    21 வயதிலிருந்து அரசியலில் இருக்கிறேன் என்கிறீர்கள். போட்டி போடும்அரசியலுக்கு எப்போது வரப்போகிறீர்கள்?
Ø    போட்டி என்ற வார்த்தையே தவறு. அரசியல் என்பது சேவை சம்பந்தப்பட்டது என்று நினைக்கும் போது, அதை சம்பாதிக்கக் கூடியஒரு அரங்கமாக நினைத்துக் கொள்வது தவறு.
Ø    இன்றைய அரசியல்வாதிகள் சேவையாக நினைக்கிறீர்களா?
Ø    கண்டிப்பாக இல்லை என்பது நான் சொல்லித் தான் தெரிய வேண்டுமா?
Ø    ரஜினிகாந்த் சிஸ்டம் சரியில்லை என்று கூறியுள்ளார். அதைப் பற்றி உங்களுடைய கருத்து?
Ø    அது எல்லாரும் சொல்லும் குற்றச்சாட்டு தான். அவரும் சொல்லியிருக்கிறார். வித்தியாசமாக ஒன்றும் சொல்லவில்லை. தவறாகவும் சொல்லவில்லை.
Ø    என்ன சிஸ்டம் மாற வேண்டும் என நினைக்கிறீர்கள்?
Ø    அரசியல் என்பது சம்பாதிக்கும் தொழில் அல்ல என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். அதற்கு இனிமேல் வரப்போகும் முதல்வருக்கோ, மந்திரிக்கோ நல்ல சம்பளம் கொடுத்து, எங்களுக்காக வேலை செய்கிற நீ என்று சொல்லிவிட வேண்டும். நீங்கள் தியாகம் செய்யுங்கள், சேவை செய்யுங்கள் என்று சொல்வதினால் சேவை செய்வதாக நினைத்துக் கொண்டு வேறு விஷயங்கள் செய்கிறார்கள். இதே போன்று பல விஷயங்கள் மாற்றப்பட வேண்டியுள்ளது.
Ø    இனி அரசியலுக்கு வருபவர்கள் என்ன செய்ய வேண்டும், செய்திருக்க வேண்டும்?
Ø    அது தெரிந்திருந்தால் நான் வந்திருக்க மாட்டேனா?
Ø    அரசியலுக்கு திரையுலக பிரபலங்கள் வந்து நாசமாக்கி விட்டார்கள் என்று பல அரசியல் தலைவர்கள் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்கள். இதற்கு முன்பு முதல்வராக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா இருவருடைய ஆட்சி எப்படியிருந்தது?
Ø    அதெல்லாம் என்னை ஏன் கேட்கிறீர்கள். அதைப் பற்றி நிறைய சொல்லிவிட்டேன்.
Ø    உங்கள் நண்பர் ரஜினிக்கு ஆதரவோ, ஆலோசனையோ வழங்குவீர்களா?
Ø    அதை தனியாக வழங்குவேன்.
Ø    கருணாநிதியின் வைர விழா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதைப் பற்றி தங்களுடைய கருத்து என்ன?
Ø    அவரைப் பற்றி ஒரு குறும்படமே இயக்கி அனைவருக்கும் அனுப்பியுள்ளேன். கூடிய விரைவில் வந்துவிடும்.
Ø    எம்.ஜி.ஆருடைய நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. கலைத்துறை சார்பாகவோ, தமிழக அரசு சார்பாகவோ எந்தவிதமான கொண்டாட்டமோ, விழாவோ இல்லையே?

Ø    கொண்டாடும் அளவிற்கு இப்போது அவருடைய பிறந்த நாள் ஒன்றுதான் இருப்பதாக தோன்றுகிறது. வேறு எந்தவொரு கொண்டாடும் நிகழ்வும் இல்லை என்பது எனது கருத்து.